சட்ட, வேளாண் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்தி - சிவகங்கையில் வியாபாரிகள் கடையடைப்பு :

சிவகங்கையில் மாவட்ட நீதிமன்றம் உட்பட 14 நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வர்த்தகர், வழக்கறிஞர் உட்பட 32 சங்கங்கள் சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் காரைக்குடியில் சட்ட, வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும் என அண் மையில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி காரைக்குடியில் சட்டக் கல்லூரி தொடங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த வழக்கறிஞர்கள் டிச.8, 9 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தைப் புறக் கணித்தனர்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி சிவகங்கையில் நகர் வர்த்தகர் சங்கத்தினர் சார்பில் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்தனர். பாஜகவினர், மாண வர்கள் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து நகர் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.

இது குறித்து நகர் வர்த்தகர் சங்கத் தலைவர் அறிவுத்திலகம் கூறும்போது, முதற்கட்டமாக 100 சதவீதம் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்த சில நாட்களில் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டு ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE