பள்ளிகள், கல்லூரிகள் அருகே குட்கா, கஞ்சா விற்ற 697 பேர் கைது :

தென் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே குட்கா, கஞ்சா விற்பனை செய்த 697 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பதாகவும், மாணவர்கள் அதற்கு அடிமையாவதாகவும் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க வேண்டும் என்று காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தென் மண்டல காவல் துறை தலைவர் அன்பு தலைமையில் தனிப்படை போலீஸார் தென் மாவட்டங்களில் சோதனை செய்தனர். பள்ளிகள், கல்லூரிகள் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்றவர்கள் மீது இதுவரை 67 வழக்குகள் பதிவு செய்து 100 கிலோ கஞ்சா பறிமுல் செய்தனர். இது தொடர்பாக 92 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் குட்கா விற்றதாக 603 வழக்குகள் பதிவு செய்து 605 பேரை கைது செய்து 1,125 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE