கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்கள் மட்டுமே நாளை (டிச.13) முதல் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மதுரை மிகவும் பின்தங்கியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில வாரங்களுக்கு முன் மதுரை வந்தபோது தெரிவித்தார். மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்டவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள்.
தற்போது ஒமைக்ரான் தொற்று பரவுவதால் மாவட்ட நிர்வாகம், கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடாதவர்கள் நாளை (டிச.13) முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரண்டு தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago