மின்சார வாகன பயன்பாட்டின் நன்மை குறித்து மின்வாரிய ஊழியர்கள் சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை மேற்பார்வை பொறி யாளர் சி.வெண்ணிலா தொடங்கி வைத்தார். ஊழியர் சங்க நிர்வாகி சசாங்கன் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், ‘எரிபொருளால் இயங்கும் வாக னங்கள் உமிழும் புகை மாசு, புவி வெப்படைதல் போன்ற பாதிப்பு களை மக்களுக்கு விளக்குவோம்.
அதேநேரத்தில் மின்சார வாக னங்களால் காற்றில் கலக்கும் நச்சுப்புகை அளவு குறைவதையும், மின் செறிவூட்டல், பராமரிப்பு செலவுகள் குறைவதையும் விளக்குவோம். அத்துடன் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை செறிவூட்ட மின்னேற்ற நிலை யங்கள் அமைக்கவும், மின்சார வாகனங்கள் வாங்கவும் அரசு மானியம் அளிப்பதையும் தெரிவிப்போம். இந்த விழிப்புணர்வு இன்று வரை நடக்கும்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago