பெரியவர்களுக்கு ரூ.15, டிஜிட்டல் கேமராவுக்கு ரூ.550 - வண்ணத்துப்பூச்சி பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்வு : சிறுவர்கள், சிறுமிகளுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை

By அ.வேலுச்சாமி

ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களுக் கான நுழைவுக் கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது.

ரங்கம் அருகே மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா வுக்கு வரக்கூடிய பார்வையாளர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2016-ல் 2.5 லட்சம், 2017-ல் 3.08 லட்சம் என இருந்த பார்வையா ளர்கள் எண்ணிக்கை 2018-ல் 7 லட்சத்தைத் தாண்டியது. அதன் பின் கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பல மாதங்கள் இப்பூங்கா மூடப்பட்டு, அண்மையில்தான் திறக்கப்பட்டது. அப்படியிருந்தும்கூட இங்கு வந்து சென்ற பார்வையாளர்களின் எண் ணிக்கை தற்போது 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

புதிய கட்டணம் விவரம்

இந்த சூழலில் இப்பூங்காவுக்கு வரக்கூடிய பார்வையாளர்கள், கொண்டு வரக்கூடிய கேமராக் களுக்கான நுழைவுக் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இங்கு வரக்கூடிய சிறுவர், சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம்(ரூ.5) உயர்த்தப்பட வில்லை. பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் அல்லாத (நான் - டிஎஸ்எல்ஆர்) கேமராவுக் கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.220 ஆகவும், டிஜிட்டல் கேமராவுக்கான (டிஎஸ்எல்ஆர்) கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.550 ஆகவும், வீடியோ கேமராக்களுக்கான கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறையை விளக்கும், திரைப்படம் திரையிடக்கூடிய ‘ஆம்பி' தியேட்டருக்கான நுழை வுக் கட்டணம், வண்ணத்துப் பூச்சிகள் குறித்த கையேடு ஆகியவற்றுக்கான கட்டணம் முன்பு இருந்ததுபோல தற்போதும் ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

உட்கட்டமைப்பு மேம்படும்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வண் ணத்துப் பூச்சிகளின் வாழ்விடத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும், மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு, பொழுது போக்கு, படப்பிடிப்பு உள் ளிட்ட அம்சங்களுக்காக ஏராள மான பார்வையாளர்கள் வரு கின்றனர். அவர்களுக்கான கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இங்கு வரக்கூடிய பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம், புகைப்பட, வீடியோ கேமராக்களுக்கான அனுமதி கட்டணங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து, பூங்காவில் கூடுதலான உட்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்