பெரம்பலூர், புதுகையில் மக்கள் நீதிமன்றம் - 2,436 வழக்குகளில் ரூ.11.06 கோடிக்கு தீர்வு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூரில் உள்ள நீதி மன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

மகளிர் நீதிமன்ற நீதிபதி கிரி, குடும்ப நல நீதிபதி தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதி லதா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் வங்கி வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 712 வழக்குகள் மூலம் ரூ.3,63,78,920-க்கு சமரச முறை யில் தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல்காதர் நேற்று தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி என்.சாந்தி, சார்பு நீதிபதி சி.சசிகுமார், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.ராஜா, குற்றவியல் நீதிபதி எம்.அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 1,724 வழக்குகளில் ரூ.7.43 கோடிக்கு தீர்வு காணப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்