பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி பட்ட மேற்படிப்பு நோய்நாடல் துறை சார்பாக நெல்லையப்பர் காந்திமதியம்மன் அன்பு ஆசிரமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருத்தணி தொடங்கி வைத்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவர் ராம சாமி முன்னிலை வகித்தார். முகாமின் நோக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரை கள் போன்ற சித்தமருந்துகளை பற்றி நோய்நாடல் துறை தலைவர் சுந்தரராஜன் விளக்கி கூறினார். மாநில முகமை அலுவலர் சுபாஷ் சந்திரன் நிலவேம்பு மூலிகை செடிகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். மருத்துவர்கள் பாலமுருகன், முகிலன் மற்றும் பட்டமேற் படிப்பு மாணவர்கள், காந்திமதி தொடக்கப்பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago