பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் - பல்சமய நல்லிணக்க கிறிஸ்து பிறப்பு விழா :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் பல்சமய நல்லிணக்க கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்றது.

மனிதமே புனிதம் என்ற கருத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ச.அந்தோனிசாமி, மத் பரசமய கோளரிநாத ஆதீனம் ல புத்தாத் மாந்நந்தா சரஸ்வதி சுவாமிகள், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன் தலைமை வகித்தனர்.

தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் வெட்டி வழங்கினார். பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மு.அப்துல்வகாப், திருநெல்வேலி பிரம்மாகுமாரிகள் இயக்க நிர்வாகி புவனேஸ்வரி, ராமநாதபுரம் பிரஹ்போதி புத்த விஹார் தலைமை துறவி புத்தபிக்கு மவுரியா புத்தா, ரட்சணிய சேனை மாகாண செயலாளர் அருள்தாஸ், முஸ்லிம் அனாதைகள் இல்ல செயலாளர் எம்கேஎம் கபீர், தென்னிந்திய திருச்சபை பேராயர் பர்னபாஸ், திருநெல்வேலி சர்வசமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், மாவட்ட சிறுபான்மை நலக்குழு தலைவர் வி.பழனி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜெரால்டு , டாக்டர் ஆர். தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் ஏழை, எளியோருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பான சேவைக்காக திருநெல்வேலி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஜெ. முகமதுஅலி, டாக்டர் எஸ். பிரேமச்சந்திரன், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.எஸ். அபுபக்கர், குறிச்சி லாரன்ஸ் முதியோர் இல்ல இயக்குநர் ஜெ. இருதயம் பெர்னாண்டஸ், கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், திருநெல்வேலி புனித அன்னாள் அறிவுத்திறன் குன்றியோருக்கான மறுவாழ்வு சிறப்பு பள்ளி நிர்வாகிகளுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. பாளையங் கோட்டை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு செயலாளர் அருள்தந்தை மை.பா. ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்