கரூர் மக்கள் நீதிமன்ற சமரச மையத்தில் - வங்கி வாராக் கடன்களில் ரூ.1.02 கோடிக்கு தீர்வு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்ற சமரச மையத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு வங்கிக் கடன்கள், கல்வி, வாகன கடன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சமரச தீர்வு மையம் நடைபெற்றது.

இதில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய 4 வங்கிகள் மூலம் விவசாய, கல்வி, சுயஉதவிக்குழு கடன்கள் பெற்ற வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப தற்காக ஓய்வுபெற்ற நீதிபதி என்.நாகராஜன் தலைமையில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் 50 வாராக் கடன்களில் ரூ.54 லட்சம், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் 11 வாராக் கடன்களில் ரூ.23.17 லட்சம், பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் 11 வாராக் கடன்களில் ரூ.21.63 லட்சம், பேங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் 6 வாராக் கடன்களில் ரூ.3.69 லட்சம் என 4 வங்கிகளின் வாராக் கடன்களில் ரூ.1,02,49,500-க்கு தீர்வு காணப்பட்டது.

முகாமில், வழக்கறிஞர் வினோத்குமார், யூனியன் பாங்க் ஆப் இந்தியா திருப்பூர் மண்டல அலுவலக முதன்மை மேலாளர் பி.யுவராஜா, ராபின்சன், கரூர் கிளை மேலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்