சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் குறித்த விளம்பர பலகைகள், பதாகைகளை மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்க வேண்டும் என்று, சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின ருக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்துக்கு ஆட்சியர் வே.விஷ்ணு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குநர் பேசியதாவது: முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் தங்களின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் வழிபடும் தல வளாகங்களில் அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பலகை அல்லது பதாகைகள் நிறுவ வேண்டும். உலமாக்கள் முறையாக பதிவு செய்யவேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்க ளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir.bcmw@nic.in மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் அணுகலாம் எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago