பாளை. ராஜகோபாலசுவாமி கோயிலில் 108 கோ பூஜை :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை  அழகிய மன்னார்  வேதநாராயணர்  ராஜகோபால சுவாமி கோயிலில் நந்த ஸப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கலியன் வானமாமலை ஜீயர் சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி 108 கோ பூஜை நடத்தப் பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது இத் திருக்கோயி லில் பழைய திருத்தேர் சிதிலமடைந் ததால் தேரோட்டம் நடைபெற்று 6 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு புதிய திருத்தேர் திருப்பணிக்காக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. திருத்தேர் திருப்பணி வேலைகள் தடையின்றி நடைபெறவும், கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால் கும்பாபி ஷேகம் விரைவில் நடைபெற வேண்டியும், உலக மக்கள் கரோனா நோயிலிருந்து விடுபட வேண்டியும் 108 கோ பூஜை நந்த சப்தமியை முன்னிட்டு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு காலையில் விஸ்வரூப தரிசனம், சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து மணவாளமாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பாடப்பட்டது. கோ பூஜைக்காக பசுமாடுகளும், கன்றுகளும் அழைத்து வரப்பட்டி ருந்தன. ஆழ்வார்திருநகரி 41-வது பட்டம் மத் எம்பெருமானார் ஜீயர் (எ) ரெங்கராமானுஜ ஜீயர் சுவாமி மங்களாசாசனம் செய்தார்.

முன்னதாக அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து கோ பூஜையை நடத்தும் தம்பதியையும், அவர்களது குடும்பத்தினரையும், 108 பசுக்களையும் அவர் ஆசிர்வதித்தார்.

இதன்பின் கருட மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜை சங்கல்பம் செய்யப்பட்டது. பசு கன்றுக்கு புது வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, சூக்தம் லட்சுமி அஷ்டோத்திரம் கூறப்பட்டு, குங்குமத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை நடத்தப்பட்டது. அங்கிருந்த பசுக்களுக்கு கோ பூஜை செய்த தம்பதியர் கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை சகஸ்ரநாம மண்டலி, நித்ய ஆராதனை கைங்கர்ய சபா,  ராஜகோபாலன் பஜனை குழு, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்,  கோபாலன் கைங்கர்ய சபா, நெல்லை உழவாரப்பணி குழாம், திருக்கோயில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்