வாலாஜாவில் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்து பங்கேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து 2 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். சாராயம், போலி மதுபானங்கள், மது பானங்களால் ஏற்படும் பிரச்சினைகள், அதனை ஒழிப்பது தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகை களை ஏந்தியபடி முழக்கமிட்டுச் சென்றனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கல்லூரி முதல்வர் பரமேஸ்வரி, கலால் பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் காண்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago