வேலூர் மாநகராட்சிக்கு விரைவில் பொன்னை குடிநீர் : பிரதான குழாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சிக்கு பொன்னை ஆற்றின் குடிநீர் திட்டத்தில் இருந்து ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கொட்டித்தீர்த்த கன மழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் மாதனூர் மற்றும் அதனை தொடர்ந்துள்ள பாலாற்றின் கரையோர பகுதிகளில் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பொதுமக்களுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளூர் நீராதாரங் களை பயன்படுத்தி குடிநீர் விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சியில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பொன்னை குடிநீர் திட்டத்திலும் பொன்னை ஆற்றில் பதிக்கப்பட்ட குழாய்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதை சரி செய்து சுமார் 40 லட்சம் லிட்டர் அளவுக்கு குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக, பொன்னை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த 100 குதிரைத் திறன்கொண்ட மின் மோட்டாரை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், பொன்னை ஆற்றுப் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும் கண்டறிந்துள்ளனர். அதை சரி செய்யும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆய்வு செய்து துரிதப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் கூறும்போது, ‘‘பொன்னை குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் சீரமைப்புப் பணி தொடங்கியுள்ளது. 25 ஆழ்துளைக் கிணறுகளில் 10 கிணறுகள் களில் பயன்பாட்டில் இருப்பதால் ஓரிரு நாளில் எல்லா பிரச்சினைகளை சரி செய்து குடிநீர் விநியோகம் தொடங் கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்