கல்லூரி தாளாளர் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் : முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் தனியார் கல்லூரித் தாளாளர் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பால பாரதி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திண் டுக்கல் அருகே முத்தனம்பட்டி யில் உள்ள தனியார் நர்சிங் கல் லூரித் தாளாளர் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகா ரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு 11 நாளில் ஜாமீன் வழங்கப்பட் டுள்ளது. ஜோதிமுருகன் மீது ஜாமீனில் வரக்கூடிய வகையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைத்துள்ளது. கல்லூரித் தாளாளர் ஜாமீனை ரத்து செய்ய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். பாரபட்சமாக செயல்படும் மாவட்ட காவல் துறையை கண்டித்து திண்டுக் கல்லில் மார்க்சிஸ்ட் சார்பில் நாளை (டிச.11) கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தவறு செய்துள்ள காவல் துறை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். அப்போது தான் நியாயம் கிடைக்கும். மேலும் ஜனநாயக மாதர் சங்கத்தின் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

அப்போது மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் சச்சிதானந்தம், மாநி லக் குழு உறுப்பினர் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் சார்பில் நாளை (டிச.11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்