பத்திரப் பதிவு அலுவலக எல்லையை மறுசீரமைக்க டிச.24-ல் கருத்துக்கேட்பு : மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களின் எல்லை களை மறு சீரமைப்பது தொடர் பான கருத்துக் கேட்புக் கூட்டம் டிச.24-ம் தேதி நடைபெறும் என ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சார் பதிவாளர் அலுவலக எல்லைகள் மக்கள் வசதிக்காக மாற்றப்படும் என வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் 6.9.2021-ல் மானியக் கோரிக்கையின்போது அறிவித்தார்.

ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு கிராமமும், அதே வருவாய் கிராமத்துக் குட்பட்ட வேறு கிராமம் மற்றொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் இணைக்கப்பட்டுள்ள நிலை தற் போது உள்ளது.

இதனால் பட்டா மாறுதல் போன்ற பதிவுத் துறை, வருவாய்த் துறை ஒருங் கிணைந்த செயல்பாடுகளை மேற்கொள்வதில் இடையூறாக உள்ளது. ஒரு வருவாய் கிராமம் முழுமையாக ஒரு சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் உரிய எல்லை சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

மதுரை மாவட்டத்தில் மதுரை தெற்கு, வடக்கு பதிவு மாவட் டங்களுக்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளின் எல்லைகளை வரு வாய் கிராமங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் அடிப்படையில் மறு சீரமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக உத்தேசிக் கப்பட்டுள்ள மறு சீரமைப்பு எல்லை விவரங்கள் துணை பதிவுத் துறை தலைவர், மாவட்டப் பதிவாளர், சார் பதிவாளர் ஆகிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்புக் கூட்டம் டிச.24-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE