ஆனால், வார்டு மறுவரையறை செய்ததிலும், வாக்காளர் பட்டியலிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. 17-வது வார்டில் 2 வார்டுகள் தள்ளியுள்ள சில தெருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் 3-வது வார்டில் 685 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், 19-வது வார்டில் 1,750 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது பெயர்கள் வெவ்வேறு வார்டுகளில் உள்ளன. இந்தக் குளறுபடி குறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் அதிமுக நகரச் செயலாளர் என்.எம்.ராஜா, பாஜக நகரத் தலைவர் தனசேகரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago