- அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்புமுன்னதாக பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார் :

நெஞ்சு வலியால் துடித்தபோதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி 20 பயணி களைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (44), அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றினார். நேற்று காலை 6 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பயணிகளுடன் கொடைக்கானலுக்குப் புறப்பட்டார். பைபாஸ் சாலை குரு தியேட்டர் சிக்னல் அருகே சென்றபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயக்கம் ஏற்படவிருந்த நிலையில் சுதாரித்த ஓட்டுநர் ஆறுமுகம் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் நடத்துநரிடம் மாத்திரை வாங்கி வருமாறு கூறிய நிலையில் தனது இருக்கையிலேயே மயங்கினார். பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் அமர்ந் தபடியே உயிரிழந்தார். இச்சம்பவம் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE