செட்டிக்குளம் ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன், விநாயகர், முருகன், கருப்புசாமி, மஞ்சமாதா கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகளுடன் சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று இரண்டாம் யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி, நாடி சந்தானம் பூஜை, பூர்ணாஹுதி,தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பின்னர், மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, மூலஸ்தான சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, கும்பாபிஷேக விழாவின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சில பெண்களிடம் இருந்து 8 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்