கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள கள்ளப்பள்ளி ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, கள்ளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் லட்சுமணனிடம் மாவட்ட உதவி திட்ட இயக்குநர் தமிழரசி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயசங்கர், குளித்தலை கோட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். 4 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, அங்கிருந்த கோப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயசங்கரிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago