இயந்திரம் மூலம் நிலக்கடலை விதைப்பு - ஹெக்டேருக்கு ரூ.1,000 மானியம் பெறலாம் :

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டர் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.

விதைப்பு கருவி மூலம் விதைப்பு பணியை குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி வட்டாரம் அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் முன்னோடிவிவசாயி கருணாநிதி தனது நிலத்தில் நிலக்கடலை விதைப்பு பணியைவிதைப்பு கருவி மூலம் டிராக்டரில் இணைத்து மேற்கொள்வதை குறிஞ்சிப்பாடி வேளாண் உதவிஇயக்குநர் பூவராகன், வேளாண் அலுவலர் அனுசுயா, துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி வேளாண் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

விவசாயி கருணாநிதி கூறுகையில், "விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்யும்போது 1 மணிநேரத்தில் 1 ஏக்கர் பரப்பில் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ளமுடிகிறது. தற்போது நிலவும்வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் செலவினத்தை கருத்தில் கொள்ளும்போது இம்முறை வசதியாக உள்ளது" என்றார். வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் பேசுகையில், "தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் (எண்ணெய்வித்துக்கள்) கீழ் ஹெக்டேருக்கு ரூ.1,000 பின்னேற்பு மானியமாக விதைப்பு கருவி மூலம் நிலக்கடலை விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் இது தொடர்பாக விளக்கம் பெற வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்