பொழுதுபோக்கு கிளப் தொடங்கி ஏமாற்றியதாக ஒருவர் கைது :

By செய்திப்பிரிவு

மதுரை நாகமலை என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் அய்யர் (40), டாஸ்மாக் கடை விற்பனையாளரான இவரிடம் மதுரையைச் சேர்ந்த சதீஸ்வரன் மூலமாக எல்லீஸ் நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (34), ஒத்தக்கடையைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் அறிமுகமாகினர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கடந்த ஆண்டு நாகமலையில் பொழுதுபோக்கு கிளப் தொடங்கினர். இதற்காக அய்யர் தனது பங்குக்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். கிளப் விற்பனை மூலம் கிடைத்த லாபத்தை மூவரும் பிரித்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, அதே கிளப்பில் முத்துவேல், கருப்புச்சாமி, சின்னச்சாமி ஆகிய மூவரும் சேர்ந்து வேறொரு பெயரில் மது விற்றனர். இதற்கு பாலசுப்பிரமணியன், பாலமுருகன் உடந்தையாக இருந்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.

இது தொடர்பாக அய்யர் கொடுத்த புகாரின்பேரில் பாலசுப்ரமணியன், பாலமுருகன், சதீஸ்வரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் பாலசுப்பிரமணியனை காவல் ஆய்வாளர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் கைது செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்