தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் - உசிலம்பட்டி ஆயுள் கைதிகள் முன்விடுதலை ரத்து : மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

உசிலம்பட்டி வழக்கறிஞர் கொலை யில் ஆயுள் தண்டனை பெற்று முன்கூட்டியே விடுதலையான நிலையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இருவரின் முன்விடுதலை ரத்து செய்யப்பட்டது.

மதுரை பி.பி.சாவடியைச் சேர்ந்த இளவரசி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் நாகு என்ற நாகேந்திரன், ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரை உசிலையைச் சேர்ந்த உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ் பாண்டியன் ஆகியோர் கொலை செய்தனர். இதில் உமாசங்கரும், சாய்பிரசாத்தும் 2005-ல் வழக்கறிஞர் குமரகுருவை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதி களை விடுதலை செய்ய 2018-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் இரு வரும் சிறையில் இருந்து முன் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை யாகும் முன்பு எந்த குற்றச் செயல்களிலும் ஈடு பட மாட்டோம் என இருவரும் உறுதிமொழி பத்திரம் வழங்கினர்.

ஆனால், அதை மீறி எனது கணவரை கொலை செய்துள்ளனர். இருவர் மீதும் விடுதலைக்குப் பிறகு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே இருவரின் முன் விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது இருவரின் முன்விடுதலையை ரத்து செய்ய உள்துறை செயலருக்குப் பரிந் துரை செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், முன் விடுதலை செய்யப்படும் நபர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.

முன் விடுதலைக்குப் பிறகு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தால் உமாசங்கர், சாய்பிர சாத் ஆகியோரது முன்விடுதலை ரத்து செய்யப் பட்டுள் ளது. இருவரையும் மீண்டும் சிறை யில் அடைக்க மதுரை, தேனி எஸ்பிக்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்