136-வது ஆண்டில் ஏவி மேம்பாலம் : ‘கேக்’ வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள்

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் (டிச.8, 1886) நேற்றுடன் 135-வது ஆண்டை நிறைவு செய்கிறது.

136-வது ஆண்டில் அடி யெடுத்து வைப்பதை கொண் டாடும் வகையில், மதுரை வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், நீர்நிலை ஆர்வலர்கள் திரண்டு வைகை ஆற்றங்கரையில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வுக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 135 ஆண்டு களாக மக்கள் பயன்படுத்தும் பாலம் தற்போது சிதிலமடைந்து வருகிறது. இந்தப்பாலத்தின் வட்ட வடிவ தூண்கள் 7, 8, தூண்கள் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் கைப்பிடிச் சுவர்கள் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பெயர்ந்துள்ளது.

நூறு ஆண்டு உள்ள கட்டிடங் களை பாரம்பரியச் சின்னமாக அரசு அறிவிக்கிறது. 135 ஆண் டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்தப் பாலத்தை மதுரையின் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இல.அமு தன், வழிகாட்டி மணிகண்டன், நீர்நிலைகள் அபுபக்கர், ஹக்கீம், சங்கரபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE