திண்டுக்கல் நீதிமன்றம் முன் இந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் திய போது, வழக்கறிஞரை தாக்க முயன்றதாக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக் ஸோவில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் மீதான 2 வழக்கு களில் திண்டுக்கல் மகளிர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இதை ரத்து செய்யக் கோரியும், நீதித் துறை, போலீஸார் ஆகி யோரைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண் டுக்கல் நீதிமன்றம் முன் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த வழக் கறிஞர் தெய்வேந்திரன், மாதர் சங்கத்தினர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தன்னை தாக்க முயன்றதாக வழக்கறிஞர் தெய் வேந்திரன் அளித்த புகாரின் பேரில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாதர் சங்கத் தலைவர் ராணி, நிர் வாகிகள் வனஜா உட்பட 20 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் நீதிமன்றம் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத் தியதாக மேலும் ஒரு வழக்கு பாலபாரதி உள்ளிட்டோர் மீது போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago