பெரியார் நிலையம் திறந்த முதல் நாளே போக்குவரத்து ஸ்தம்பிப்பு : பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் சிரமம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் பஸ் நிலையம் தொலைநோக்குப் பார்வையில் கட்டப்படாததால், திறப்பு விழா கண்ட முதல் நாளே வாகன ஓட்டு நர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

பெரியார் பஸ் நிலையம் திறந்த முதல் நாளான நேற்று போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேலூர், திருவாதவூர், அழகர்கோவில், திருமங்கலம், அலங்காநல்லூர், செக்கானூரணி, காரியாபட்டி, திருப்புவனம் ஆகிய வழித்தட பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டன. மற்ற பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்கு வெளியே இருந்து இயக்கப்பட்டன.

இருப்பினும், பஸ் நிலைய வளாகத்தில் மட்டுமின்றி பஸ்கள் வெளியேறும் பகுதியிலும் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. ஏராளமான போலீஸார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் அவர்களால் நெரிசலை கட்டுப்படுத்த முடிய வில்லை.

சிம்மக்கல், ரயில் நிலையம் பகுதியில் இருந்து வரும் மாநகர் பஸ்கள், நேரடியாக பஸ் நிலை யத்துக்குள் அனுமதிக்கப்படாமல், டிபிகே சாலையை சுற்றி வந்தன. திருப்பரங்குன்றத்தில் இருந்து முத்து பாலம் வழியாக வரும் வாகனங்கள் சிம்மக்கல் செல்ல எல்லீஸ்நகர் பாலத்தில் ஏறி, வலது புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

இந்தப் போக்குவரத்து மாற் றத்தால் கட்டபொம்மன் சிலை, டிபிகே சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் தற்போது வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து இயக் கப்பட்ட பஸ்களுக்கும் சேர்த்துதான் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், போதுமான பஸ்கள் நிறுத் தும் அளவு புதிய பஸ் நிலையம் இல்லை என்ற குற்றச்சாட்டு ஏற் கெனவே எழுந்தது.

இங்குள்ள வணிக வளாகம் திறக்கப்படும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே பெரியார் பஸ் நிலை யத்தில் போதுமான இட வசதி இல் லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால்தான் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், முற்றிலும் வணிக நோக்கில் கட்டியுள்ளதால் அந்த நோக்கம் நிறைவேறாமல் நெரிசல் மேலும் அதிகரித்திருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்