மதுரையில் ரூ.167.06 கோடியில் கட்டப்பட்ட பெரியார் பஸ் நிலை யத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத் தார்.
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட் டத்தின் கீழ் ரூ.167.06 கோடியில் பெரியார் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இப்பணி 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இடையில் கரோனா ஊரடங்கால் வடமாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் பணிகள் தாமதம் அடைந்தன. பின்னர் ஊரடங்கு தளர்வால் மீண்டும் பணிகள் வேகமெடுத்தன. இந்நிலையில், புதிய பஸ் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் பெரியார் பஸ்நிலையத்தை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து மதுரையில் பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர பஸ்களை கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்எல்ஏ.க்கள் தள பதி, பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago