மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,400 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4 மணியளவில் விநாடிக்கு 12,400 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து நீர் மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago