பாழடைந்துள்ள கால்நடை மருத்துவமனை : சங்கனாபுரம் விவசாயிகள் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகேயுள்ள சங்கனாபுரம் கால்நடை மருத்துவமனையில் கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழவூர் அருகே உள்ளசங்கனாபுரம் கிராமத்தில் விவசாயத்துடன் கோழி, ஆடு, மாடுகளை விவசாயிகள் வளர்த்துபிழைப்பு நடத்துகிறார்கள். சங்கனாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின்தேவைக்காக சங்கனாபுரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்குமுன் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு ஒரு கால்நடை மருத்துவர் உட்பட மூன்று பேர் பணியாற்றி வந்தனர். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரையும், பிற்பகல் 3 மணிமுதல் மாலை 5 மணி வரையும் இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாகஇம்மருத்துவமனை கட்டிடம்பராமரிப்பின்றி மிகவும் மோசமாக காணப்படுவதால் கால்நடை மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மருத்துவமனைக்கு சரிவர வருவதில்லை என்று விவிசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இப்பகுதியைச் சேர்ந்தமணிகண்டன் என்பவர் கூறும்போது, ``தற்போது பெய்துவரும் மழையால் கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. அவற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல்அவதிப்பட்டு வருகிறோம்.மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் பலவும் உயிரிழந்து விடுகின்றன. இதனால், பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துவருகிறோம்.பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக இருக்கும் இந்த கால்நடை மருத்துவமனையை புதுப்பித்து, மருத்துவர்களும், பணியாளர்களும் பணிபுரியும்சூழ்நிலையை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE