ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் : வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஆம்பூர், வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டக் கோரி மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசும்போது, ‘‘எனது தொகுதிக்கு உட்பட்ட வணிக நகரங்களான ஆம்பூர், வாணியம்பாடியில் இருந்து கணிசமான வருவாய் கிடைக் கிறது. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரெட்டித்தோப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனால், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் அனைவரும் பாதிக் கின்றனர்.

ஆம்பூரில் ரயில்வே மேம் பாலம் கட்டுவது மிகவும் அவசியமானது. தற்போதுள்ள குறுகிய சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் கழிவுநீருடன் சேர்ந்து மழை நீர் தேங்குகிறது. மேம்பாலம் கட்டினால் பெத்லகேம், கம்பிக்கொல்லை, நதிசீலபுரம், மலைமேடு, நாயக்கநேரி பகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.

ரூ.16 கோடி மதிப்பீடு

அதேபோல், வாணியம்பாடி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய ரயில்வே கிராசிங்கை கடக்க வேண்டியுள்ளது. 120-க்கும் மேற்பட்ட ரயில்கள் இரு திசை களிலும் கடந்து செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இங்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட மேம்பாலம் திட்டம் கிடப்பில் உள்ளது. ஆம்பூர் ரயில் நிலையத்தில் காவேரி, ஏற்காடு, சாம்ராஜ் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்’’ என கோரிக்கை வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்