முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது.
இதில், ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் களிடம் இருந்து, நடப்பாண்டில் 3,006 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6,605 முன்னாள் படைவீரர்கள் மற்றும் 5,528 கைம்பெண்கள் என மொத்தம் 12,133 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. அவர்களில், 610 முன்னாள் படைவீரர்கள், வேலைவாய்ப்பு கேட்டு பதிவு செய்துள் ளனர். கடந்தாண்டு 20 பேருக்கு, அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையை படைவீரர்கள் பாதுகாப்பதால், நாட்டின் உள்ளே நாம் நிம்மதியாக பணி செய்து வருகிறோம்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் கொடிநாள் நிதி வசூல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.47,53,000 நிர்ணயம் செய்யப்பட்டது. அதேநேரத்தில் ரூ.50,90,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கு கொடிநாள் நிதியாக ரூ.57,04,000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொடிநாள் நிதியை தாரளமாக வழங்க வேண்டும். திருவண் ணாமலையில் உயர் ராணுவ அதிகாரிகள் தங்கவும், படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் பயனடையும் வகையில் ரூ.3 கோடியில் ஜவான்ஸ்பவன் கட்டிடம் கட்டப்படுகிறது” என்றார்.
இதையடுத்து, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டன. இதில், திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்ன தாக, படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago