மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்க நேர்காணல் :

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளி நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான நேர்கா ணல் விழுப்புரத்தில் வரும் 10,11ஆகிய இரு தினங்கள் நடை பெறுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இரு கால்கள் பாதிக்கப்பட்டு, இரு கைகள் நல்ல நிலையில் உள்ளகல்வி பயிலும் மாணவ, மாணவி யர், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள், இதுநாள் வரை இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் விண்ணபிக்காதவர்கள் மற்றும் பெறாத தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாற்றுத் திறனாளிகளி டமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், ‘மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்’ என்ற முகவரிக்கு அஞ்சலில் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கான நேர்முகத் தேர்வு 8 மற்றும் 9 ஆகிய இரு நாட் கள் ஆட்சியர் அலுவலக வளாகமாற்றுத்திறனாளி நல அலுவல கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. வெகு தொலைவிலிருந்து வருகை புரியும் மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திற னாளிகள் 10-ம் தேதி செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்விலும், திண்டிவனம், மரக்காணம் மற்றும் மயிலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 11-ம் தேதி திண்டிவனம் நகராட்சி அலு வலகத்திலும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்