மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள் : 25 ஆண்டுக்கு பிறகு மண்டலங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை மாநகராட்சியில் ஆரம்பத்தில் 72 வார்டுகள் இருந்தன. அதன் பிறகு ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 நகராட் சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சிகள் மாநகராட் சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப் பட்டன. மாநகராட்சியில் நான்கு மண் டலங்கள் செயல்பட்டு வந்தன.

புறநகர் பகுதிகளிலும் பொதுமக் களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான நிர்வாக வசதிக்காக 100 வார்டுகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டு ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஐந்து உதவி ஆணையாளர்களைக் கொண்டு மாநகராட்சி இனி செயல் பட உள்ளது.

1-வது மண்டலம் கிழக்கு மண்டலமாகவும், 2-வது மண்டலம் வடக்கு, 3-வது மண்டலம் மத்தி, 4-வது மண்டலம் தெற்கு மண்டல மாகவும், 5-வது மண்டலம் மேற்கு மண்டலமாகவும் செயல்படும். முதல் மண்டலத்தில் 3 முதல் 14 வார்டு கள் வரையும், 16, 17, 18, 19, 36 மற்றும் 40-வது வார்டுகளும் இடம் பெறுகிறது.

2-வது மண்டலத்தில் 1, 2, 15, 20 முதல் 28 வார்டுகள் வரையும், 31 முதல் 35 வரையும், 63 முதல் 66 வரையும் உள்ள வார்டுகள் இடம் பெறுகின்றன. 3-வது மண்டலத்தில் 50, 51, 52, 54 முதல் 62 வரையும், 67 முதல் 70 வரையும், 75, 75, 77 ஆகிய வார்டுகளும் இடம் பெற்றுள்ளன. 4-வது மண்டலத்தில் 29, 30, 41 முதல் 49 வரையும், 53 மற்றும் 85 முதல் 90 வரையும் உள்ள வார்டுகள் இடம் பெற்றுள்ளன. 5-வது மண்டலத்தில் 71 முதல் 74 வரையும், 78 முதல் 84 வரை மற்றும் 91 முதல் 100 வரையும் வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் 18 வார்டுகள் முதல் அதிகபட்சம் 21 வார்டுகள் வரை இடம் பெற்றுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய மேயர், கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பிறகு, 5 மண்டலங்களும் செயல்படத் தொடங்கும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE