மதுரை பெரியார் பஸ் நிலையம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.167 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தை காணொலி மூலம் முதல்வர் இன்று காலை திறந்து வைக்கிறார்.
பொதுவாக பஸ் நிலையத்தின் சுவர்கள் சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்புவதுமாக பயணிகள் அசுத்தம் செய்வார்கள். அதனால், பஸ் நிலையமே நோய் பரப்பும் இடமாக மாறிவிடும். இந்த சூழலை தவிர்க்க மதுரை மாநகராட்சி மதுரையின் பழமையையும், அதன் பராம்பரியத்தையும் போற்றும் வகையிலும், அதனை அடையாளப்படுத்தும் வகையிலும் பஸ் நிலையத்தின் சுற்றுச் சுவர்களில் பயணிகளை கவரும் வகையில் அழகாக ஓவியங்களை மாநகராட்சி வரைந்துள்ளது. அதனால், தற்போது ஓவியங்கள் வரைந்த பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும், வண்ண மயமாகவும் காட்சியளிக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago