அதிமுக திட்டங்களை முடக்க திமுக அரசு முயற்சி ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்க நினைக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை, சமத்துவபுரம் ஆகிய திட்டங்களை அதிமுக ஆட்சிக் காலத்தில் முடக்கவில்லை.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 29 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் விலை குறைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஆறு மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதி எதையும் திமுக நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், அன்பழகன், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்