மதுரை மாநகராட்சி 17-வது வார்டு எல்லீஸ்நகர் அருள்நகர் மற்றும் 58-வது வார்டுக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் மழைநீரோடு கழிவு நீரும் தேங்கி உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மதுரை பைபாஸ் ரோடு பிஆர்சி தலைமை அலுவலகம் எதிர்புறம் எல்லீஸ்நகர் விரி வாக்கம், அருள்நகர், வ.ஊ.சி. தெருவில் பல நாட்களாக பாதாளச் சாக்கடை கால்வாய் அடைத்து கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல, 58-வது வார்டு சிந்தாமணி கால்வாயில் அகற்றப்படாத குப்பைகளோடு, மழைநீரும், கழிவுநீரும் தேங்கி குடியிருப்புக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் தொற்றுநோய் பரவிவரும் வேளையில், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago