திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல், சிஐடியு மாவட்ட தலைவர் மோகன், பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை தலை மையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரி யும் மாடுகளை பிடிப்பதற்காக அனுப்பிய, பாளையங்கோட்டை மண்டலம் 13-வது வார்டு அம்பேத்கர் சுயஉதவி குழு தூய்மைப் பணியாளர் மாரிமுத்து, மாடு உதைத்ததில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தூய்மைப் பணியாளர்களை மாடு பிடிக்க அனுப்புவது சட்டத்து க்கு புறம்பானது. மாடுபிடிப்பதில் பழக்கம் உள்ளவர்களை அப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாரிமுத்துவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லை மாநக ராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக இபிஎப் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மற்றொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago