திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்கு வரத்துக்கு இடையூறாகவும் சாலைகளில் திரிந்த 242 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 137 மாடுகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் அபராதம் மற்றும் பராமரிப்பு தொகை செலுத்தி திரும்ப பெற்றுள்ளனர். மொத்தம் இதுவரை ரூ.3 லட்சம் அபராதமாக பெறப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்கள் 10 பேரின் மீது மாநகர காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகர எல்லைக்குள் மாடுகள் வளர்க்க மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பத்தில் எத்தனை மாடுகள் வளர்க்கப்படுகின்றன, அவைகளின் புகைப்படம், அவைகள் வளர்ப்பதற்கு மாட்டுத்தொழுவம் அமைக்கப் பட்டுள்ள இடத்தின் வரைபடம் மற்றும் இடத்தின் உரிமை விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி விண்ணப் பங்கள் அந்தந்த சுகாதார ஆய்வாளர்கள் வாயிலாக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் அனுமதியின்றி வளர்க்கப்படும் மாடுகள் பிடிக்கப்பட்டால் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago