வேலூர் கோட்டை சுற்று சாலையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து, லேப்டாப், கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது நேற்று முன்தினம் காலை தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷியாமளா தலைமையிலான காவலர்கள் கோட்டை சுற்றுச் சாலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 16 வயது சிறுவர்கள் 4 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரிக்க முயன்றனர். அவர்கள் காவலர்களை பார்த்ததும் தப்பி ஓடினர். காவலர்கள் விரட்டிச் சென்றதில் ஒருவரை மட்டும் பிடித்தனர். விசாரணையில் அவர் காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 3 சிறுவர்களையும் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago