நாடக கலைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிடுக :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியரிடம் தேசிங்குநாடக மன்றத்தை சேர்ந்த நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:

திருவிழா காலங்களில் 6 மாதம்மட்டுமே நாங்கள் நாடகம் நடத்தி எங்களின் குடும்ப ஜீவனம் நடத்திவருகிறோம். தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாடகக்கலையை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு விதித்த தடையால் நாடகம் நடத்தமுடியாமல் வருமானம் ஏதுமின்றிவாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகிறோம்.எனவே அரசு, எங்களின் நாடக கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் செழிக்க சுயதொழில் தொடங்க ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வங்கி மூலம் கடன் உதவி செய்ய வேண்டும். அந்த கடன் மூலம் தொழில் தொடங்கி ஏற்கெனவே வாங்கிய கடனை சிறுக, சிறுக அடைத்து விடுவோம். என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்