பாலியல் புகாருக்குள்ளான திண்டுக்கல் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முரு கன், இவர் மீது பாலியல் புகாரில் தாடிக்கொம்பு போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட 14 பிரிவுகளில் 3 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட ஜோதி முருகனுக்கு, திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியது. போக்ஸோவில் கைது செய்யப்பட்டும், கைது செய்யப்பட்ட இருவாரத்தில் ஜாமீன் வழங்கியதை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சக மாணவர்கள் மீது எவ்வித பாலியல் புகார்களும் இல்லை. ஆனால், கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீதுதான் மாணவிகள் பாலியல் புகார்களை அளிக்கின்றனர் என்றார். இந்தியாவில் 3-வது இடத்துக்கு வரும் அளவுக்கு தமிழகத்தில் பாலியல் பிரச்சினை அதிகரித்து வருகிறது.
போக்ஸோவில் கைது செய்யப் பட்டவர் பிணையில் வர முடியாது என்றபோது நீதிமன்றம் ஒருவரை பிணையில் விடுவித்திருப்பது நியா யமா என அவர் கேள்வி எழுப்பினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago