ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த இரு ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி அளிக்கப்படும் என ஈரோடு ஆட்சியர் சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம், பெரியசேமூர் பகுதியில் இயங்கி வரும் இரு பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டதையடுத்து, இரு ஆலைகளின் மின் இனைப்பும் துண்டிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago