பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலப்பாளையத்தில் அண்ணா வீதி, பஜார் திடல், சந்தைரவுண்டானா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச் சோடி காணப்பட்டது. மேலப் பாளையத்திலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் எஸ்டிபிஐ கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி தலைவர் மின்னத்துல்லா தலைமை வகித்தார். மாநிலபொதுச் செயலாளர் உமர் பாரூக்,மாநகர் மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செந்தில்குமார், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் மாநில துணைத் தலைவர் பாத்திமாஆலிமா ஆகியோர் உரையாற்றினர். மாநகர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எ. கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமுமுக சார்பில் மேலப்பாளையம் ரவுண்டானா அருகே நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தென்காசி
தென்காசி கொடிமரத் திடலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் பாதுஷா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மைதீன் ஆஷிக் வரவேற்று பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா, எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட தலைவர் ஜாபர் அலி ஃபைஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago