காவலர் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் : லேப்டாப், அலுவலக ஆவணங்கள் திருட்டு :

By செய்திப்பிரிவு

வேலூர் காவலர் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் லேப்டாப், கேமரா மற்றும் அலுவலக ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபம் அருகில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, உதவி பொறி யாளராக பணியாற்றி வரும் சிவக்குமார் என்பவர் நேற்று காலை அலுவலகத்துக்கு வந்த போது அலுவலகத்தில் திருட்டு நடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 லேப்டாப்கள், ஒரு கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அலுவலக ஆவணங் கள் இருந்த அறையின் பீரோவை உடைத்து அதிலிருந்த ஆவணங்களையும் அவர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார். இந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விரைந்து சென்று விசாரணை செய்தார். மேலும், மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப் பட்டது. அதில், சற்று தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளம் வரை ஓடியது. அங்கு காவலர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட குடிநீர் மோட்டார் கிடந்தது. அதை காவல் துறையினர் கைப்பற்றினர். அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்இல்லாத நிலையில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள் ளதா? என விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்