பாதுகாப்பற்ற இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் முருகையா தலைமையில் நடந்தது. சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், சம்மேளன துணைத்தலைவர் பொன்.பாரதி, பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
டாஸ்மாக் கடைகள் ஏற்கெனவே இருந்தது போல், இரவு 8 மணி வரை செயல்பட உத்தரவிட வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கடையின் விற்பனை தொகையை சென்னை போன்று நேரடியாக வங்கி மூலம் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொது இடமாறுதல் அமல்படுத்தவேண்டும். பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என்பதுள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago