பிடாகம் எனும் எலவனாசூர் கோட்டை ஊராட்சியில் இயங்கிவரும் சார்- பதிவாளர் அலுவல கத்திற்கு வரும் பதிவுதாரர்கள் தரையில் அமர்ந்திருக்கும் நிலை காணப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை வட்டம்பிடாகம் எனும் எலவனாசூர் கோட்டையில் சார்- பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் வார நாட்களில் 20 முதல் 30 பத்திரப் பதிவுகளும், சில பதிவுத் திருமணங்களும் நடைபெறும். எலவனாசூர்கோட்டை சுற்று வட்டார மக்கள் தங்கள் பாகப் பிரிவினை நிலப் பதிவு, வீட்டு மனைப் பதிவு உள்ளிட்டவற்றுக்காக அலுவலகத்திற்கு வரும்போது, பதிவுக்காக ஒருநாள் முழுவதும் அலுவலகத்தில் காத்திருக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் அவ்வாறு வரும் பதிவுதாரர்கள், காத்திருக் கும் நேரத்தில் அங்கு அமர கூட இருக்க வசதி இல்லை. பல ஆயிரம் ரூபாய் பத்திரப் பதி வுக்காக பெறும் பதிவுத் துறை, பதிவுதாரர்களின் நிலையை உணராமல், இருக்கை வசதி கூட ஏற்படுத்தவில்லை என ஆதங்கப்படுகின்றனர். மேலும் பதிவுக் கட்டணத்துடன், சேவைக் கட்டணம் வசூலிக்கும் பதிவுத் துறை, பதிவுதாரர்களுக்கு, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, இருக்கை வசதிகளை கூட ஏற்படுத்தாதது ஏன் என பத்திரப் பதிவு அலுவலகம் அருகிலேயே இருக்கும் ஆவண எழுத்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். பத்திரப்பதிவுத் துறையில் பதிவாளரின் இருக்கையில் மாற் றங்களைக் கொண்டுவந்துள்ள தமிழக அரசு அனைத்து பதிவாளர்அலுவலகங்களில் பதிவுதாரர் களுக்கு இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள் ளனர்.
இது குறித்து சார்- பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் விசா ரித்தபோது, போதுமான இடவசதி இல்லாததால் இருக்கைகள் போட முடியவில்லை என தெரிவித்தனர்.
சேவைக் கட்டணம் வசூலிக்கும் பதிவுத் துறை, பதிவுதாரர்களுக்கு, குடிநீர், பொதுக்கழிப்பிட வசதி, இருக்கை வசதிகளை ஏற்படுத்தவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago