கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - பட்டியலின வகுப்பினருக்கான விடுதிகளில் மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறையின் கீழ்இயங்கி வரும் பள்ளி மற்றும்கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண் ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 27 பள்ளி மாணவர் விடுதிகள், 11 பள்ளி மாணவியர் விடுதிகள், 1 ஐடிஐ விடுதி, ஆக மொத்தம் 39 விடுதிகளில் தங்கி கல்வி பயில மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று முதல் 10-ம் தேதி வரையிலும்,10 சதவீதம் கூடுதல் சேர்க்கைக்காக 17-ம் வரையிலும் நடைபெற உள்ளது.

விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டுவருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்ந்து பயில அனுமதிக்கப்படுவர்.

மாணவர்களின் இருப் பிடத்திற்கும் பள்ளிக்கும் இடை வெளி 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இவ்விதி மாணவிகளுக்கு பொருந்தாது. பள்ளி மற்றும் ஐடிஐ தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயி லும் மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்திசெய்து அதனை, சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லதுகாப்பாளினியிடம் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்