மானாமதுரையில் இருந்து மதுரைக்கு - மின்சார ரயிலை இயக்கி சோதனை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் இருந்து மதுரைக்கு மின்சார ரயிலை இயக்கி ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

மதுரை - ராமேசுவரம் இடையேயான ரயில் பாதை மின்மயமாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது மதுரை- உச்சிப்புளி வரை மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மானாமதுரையில் இருந்து மதுரைக்கு 47 கி.மீ.-க்கு மின்சார ரயிலை இயக்கி ஆய்வு செய்தார். மின்சார ரயிலை மானாமதுரை பயணிகள் வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக, தலைமை பாது காப்பு ஆணையர் அபய்குமார்ராய் மதுரையில் இருந்து டீசல் இன்ஜினில் மானாமதுரை வந்தார். அவர் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அபய்குமார்ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மின்சார ரயிலை இப்பகுதி யில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இயக்கி பார்த்து, அதற்கான அறிக்கையை ரயில்வே உயரதிகாரிகளுக்கு அனுப்புவோம். மேலும் ரயில் பாதை முழுவதும் மின்மயமாக் கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக முடி வடைந்து வருகிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்