கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம் பாதுகாக்கப்பட்ட பகுதி : தொல்லியல் துறை அறிவிக்க உத்தரவு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம் பராமரிப்பு இன்றி இருப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளி யானது.

இதன் அடிப்படையில் தெப்பக் குளத்தைச் சீரமைக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தானாக விசாரணைக்கு எடுத்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், தெப்பக்குளம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் மாசுபடுவதைத் தடுக்கவும், முறையான பராமரிப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் பொதுக் கழிப்பறை, குப்பை கொட்டும் இடம் கட்ட வேண்டும்.

கோயில் பகுதி மாசுபடுவதைத் தடுக்கவும், சுகாதாரத்தை மேம் படுத்தவும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கு தனித்தனி குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கூடலழகர் தெப்பக்குளத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொல்லியல் துறை அறிவிக்க வேண்டும்.

தெப்பக்குளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தின் தற்போதைய நிலை குறித்து கோயில் நிர் வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஜன.2-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE