ஈரோடு கருங்கல்பாளையத்தில் சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 23-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு, பூவோடு நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக, பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். இதையடுத்து தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சில அடி தூரம் தேர் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது.
குண்டம் இறங்கவும், தேரோட்டத்தின் போதும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும், அம்மனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோயிலில் இன்று (6-ம் தேதி) இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், நாளை (7-ம் தேதி) பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது. 8-ம் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9-ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago