தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் : சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கை மாநாட்டுக்கு, மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் சு.லட்சுமணன் வாசித்தார். சங்க முன்னாள் பொதுச் செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில், அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தில், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெ.கிருஷ் ணசாமி, பொருளாளர் மு.வெங்க டேசன், துணைத் தலைவர்கள் ந.குமாரவேல், முகமதுஅலி ஜின்னா, கி.சோமசுந்தர், மாநில தணிக்கையாளர்கள் வீ.பா.முரு கன், நா.வசந்தன், மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சாந்தகுமாரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வரவேற்புக்குழுத் தலைவர் இ.ஜாகீர் உசேன் வரவேற்றார். வரவேற்புக் குழுச் செயலாளர் எம்.கென்னடி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்